காஷ்மீர் 70ம் நாள், கொல்லப்பட்டவர்கள் 85 ஊரடங்கு தொடர்கிரது

காஷ்மீர் “மக்கள் மீது கொடும் வன்முறைகள்… PDP கட்சி ஹிட்லரின் நாஜிப் படைகளைவிடக் கொடுமையாக மக்களை வேட்டையாடுகிறது. RSS ஆல் இயக்கபடும் கூட்டணியிடம் அனைத்தையும் அடகு வைத்துவிட்டது” எனக் கூறி மெஹ்பூபா கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டாரிக் ஹமீத் கற்றா பதவி விலகியுள்ளார்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
கற்றா பா.ஜக அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. “காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், அரசியல் சட்டம், பண்பாடு, ஏன் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை உள்ள மாநிலம் எனும் மத அடையாளம் அனைத்திற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ் பின்புலமுள்ள பா.ஜ.கவை எந்நாளும் அரசதிகாரத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாம். ஆனால் என்றைக்கு நாம் அவர்களோடு கூட்டணி அமைத்தோமோ அன்றே மக்களின் மனத்தில் துரோகத்தின் விதைகள் தூவப்பட்டன.

காஷ்மீரின் மதிப்பீடுகளையும், விருப்புகளையும் வெட்டிச் சாய்த்துவிட்டு பாஜகவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டோம். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் காஷ்மீரை இந்து மயமாக்கும் RSS திட்டத்தைச் சாத்தியமாக்க இதன்மூலம் வழிவகுத்தோம்”

எனக் கூறி கற்றா தன் பதவி விலகலை அறிவித்துள்ளார்.

இது பிடிபி கட்சிக்கு மட்டுமல்ல பா.ஜகவுக்கும் பெரிய அடி.

இதற்கிடையில் காஷ்மீர் பற்றி எரியத் தொடங்கி நேற்றுடன் 70நாட்கள். இரண்டு நாட்கள் முன் இறந்த குல்காம் இளைஞன், நேற்று இறந்த புல்வாமா சிறுவன் (14) ஆகியோருடன் இதுவரை கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85.

பல நகரங்களில் ஊரடங்கு தொடர்கிறது.