நூற்பட்டியல்

2010 வரை வெளிவந்த எனது நூற்பட்டியலை அறிய கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கவும்

நன்றி: மீனா, பேரா. துரைராஜ்.

தலித் அரசியல்

தலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில் தலித் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன, இந்த 20 ஆண்டுகளில் தலித் அரசியலின் தோற்றம், வளர்ச்சி, செல்லும் திசை ஆகியன குறித்த கூர்மையான அவானத்துடன் கூடிய ஒரு விரிவான வரலாறாக இது அமைந்துள்ளது.

ஆரியக் கூத்து

கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சமவெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்கைளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது. இந்த நூலின் ஒரு பகுதி “ஏன் பார்ப்பனர்கள் கால்டுவெல்லைக் கரித்துக் கொட்டுகிறார்கள்” எனும் தலைப்பில் இதே தளத்தில் உள்ளது. நண்பர்கள் வாசிக்கலாம். தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இராணுவமயமாகும் இலங்கை

2009 இன அழித்தொழிப்பிற்குப் பின் இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகக் கொடூரமான ராணுவ வல்லாதிக்க அரசாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களைப் புறக்கணித்து தனது இனவாத ஒடுக்குமுறைகளை பௌத்த- சிங்களப் பேரினவாத அரசு எவ்வாறு முன்னெடுத்து வருகிறது என்பதை இந்த நூல் ஆழமாக முன்வைக்கிறது. நேரில் சென்று கண்ட அனுபவங்களின் பின்னணியில் இன்றைய இலங்கையைப் பேசும் இக் கட்டுரைகள் ஈழத் தமிழ் இதழ்களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றவை. மூன்றாவது முறையாக இலங்கை சென்றபோது கூட்டங்களில் பேசக்கூடாது என அ.மார்க்ஸுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம்.இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக்கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

வகுப்புவாத அரசியலுக்கு எதிரான மாபெரும் ஆவணமாகத் திகழும் இந்நூல் மதச்சார்பின்மை,சிறுபான்மையினர் பாதுகாப்பு,பெரும்பான்மை வாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போரட்டம் எனப் பல தளங்களிலும் விரிந்து,நம் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பல தவறான எண்ணங்களையும் பொய்களையும் அழுத்தமாக எதிர்த்துப் போராடுகிறது.புனைவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடிச் செல்கிறது.